
கடலுக்கு அப்பால்
ப. சிங்காரம் எழுதிய 'கடலுக்கு அப்பால்' (காலச்சுவடு பதிப்பகம் / டிஸ்கவரி புக் பேலஸ்) என்பது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பினாங்கு மற்றும் மலேயாவில் வசித்த தமிழ் லேவாதேவி உழைப்பாளர்களின் புலம்பெயர் வாழ்க்கையையும் தவிப்புகளையும் சித்தரிக்கும் ஒரு உன்னத கிளாசிக் தமிழ் நாவலாகும்.
₹160
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNovel / Classics / Diaspora Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
தமிழகத்தில்வாழ வழியற்றுத் தென்கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட இரண்டாம் உலகப் போர் பின்புலத்தில் ப.சிங்காரம் சொல்லியுள்ள கதையான கடலுக்கு அப்பால் நாவலில் தமிழர்களின் இருப்புப் பதிவாகியுள்ளது. மனித இயல்பை நுட்பமாகவிவரித்துள்ள ப.சிங்காரம், வெறுமனேகாட்சிப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டவர் அல்லர். உச்சம், வீழ்ச்சி, உன்னதம், கசடு என இருவேறுஎதிரெதிர் முனைகளில் வாழ்கின்ற மனிதர்கள், எப்பொழுதும் மேன்மையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்று புனைவின் வழியே ப.சிங்காரம் உணர்த்துகின்றார். 'மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம்எதையும் இழப்பதில்லை' என்ற தேறுதலுடன் முடியும்நாவலின் இறுதி வரிகள்தான் ப.சிங்காரம் சொல்லவிழைவதா? யோசிக்க வேண்டியுள்ளது.
ந.முருகேசபாண்டியன்

