
தலைகீழ் விகிதங்கள்
Replicated entry of SKU 102139.
₹270
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsBiography
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
1970களில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இருந்தது. இந்திய இளைஞர்களை வாட்டி வதைத்த இந்த நெருக்கடி அவர்கள் வாழ்விலும் நம்பிக்கைகளிலும் விழுமியங்களிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருந்தது. இளைஞர்களிடையே போராட்டக் குணமும் அரசியல் விழிப்புணர்வும் அதிகம் இருந்த அந்தக் காலகட்டத்தின் போராட்டமயமான வாழ்வைச் சொல்லும் கதைதான் நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவல்.
அன்றைய தலைமுறையினரின் அகப்போராட்டங்களை நாஞ்சில் நாடன் சித்தரித்துள்ள விதம், இன்றைய தலைமுறையினரின் அகப்போராட்டங்களை அக்கறையுடன் அணுக உதவுகிறது. காலம் மாறியும் சூழல்கள் மாறியும் வாழ்வின் சில விகிதங்கள் மாறுவதே இல்லை என்பதை உணர்த்தும் இந்த நாவல் வெளியாகிக் கிட்டதட்ட அரை நூற்றாண்டு ஆன பிறகும் தன்னுடைய புத்துணர்வைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதே இதன் வெற்றி.

